என்னிடம் திருப்பித்தருவாயா…

உன் நினைவுகளில் என் நேரம் இழந்தேன்..
உன் புன்னகையில் என் புத்தியனைத்தையும் இழந்தேன்..
உன் இனிய குரலினில் என் எண்ணங்களை இழந்தேன்..
உன் ஒற்றைக்கண் பார்வையில் என் உறுதியனைத்தையும் இழந்தேன்..
உன் பண்பான பேச்சினில் என் பசி இழந்தேன்..
உன் கனிவான தோற்றத்தில் என் கண்பார்வை இழந்தேன்..
உன் சுகம் கண்டபொழுது முதல் என் சுற்றமனைத்தையும் இழந்தேன்..
உன் இதழ் தந்த இனிமையில் என் இதயத்தை இழந்தேன்..
உன் பிரிவினில் என் பதவி இழந்தேன்... ஆக மொத்தத்தில்..
உன்னில் என்னை இழந்தேனடி...!

எத்தனையோ ஏற்றுக்கொண்டாயே என்னிடமிருந்து...
அத்தனையும் பெரிதல்லடீ உன்னைவிட..!
மொத்தமாக கேட்கவில்லை எதையும் உன்னிடமிருந்து..
என்னை மட்டுமாவது என்னிடம் திருப்பித்தருவாயா…. என் தேவதையே..!தேவதையே..!

எழுதியவர் : கீதாஞ்சலி (3-Sep-15, 3:13 pm)
பார்வை : 112

மேலே