கீதாஞ்சலி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : கீதாஞ்சலி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 04-Dec-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 06-Nov-2011 |
பார்த்தவர்கள் | : 106 |
புள்ளி | : 4 |
உன் நினைவுகளில் என் நேரம் இழந்தேன்..
உன் புன்னகையில் என் புத்தியனைத்தையும் இழந்தேன்..
உன் இனிய குரலினில் என் எண்ணங்களை இழந்தேன்..
உன் ஒற்றைக்கண் பார்வையில் என் உறுதியனைத்தையும் இழந்தேன்..
உன் பண்பான பேச்சினில் என் பசி இழந்தேன்..
உன் கனிவான தோற்றத்தில் என் கண்பார்வை இழந்தேன்..
உன் சுகம் கண்டபொழுது முதல் என் சுற்றமனைத்தையும் இழந்தேன்..
உன் இதழ் தந்த இனிமையில் என் இதயத்தை இழந்தேன்..
உன் பிரிவினில் என் பதவி இழந்தேன்... ஆக மொத்தத்தில்..
உன்னில் என்னை இழந்தேனடி...!
எத்தனையோ ஏற்றுக்கொண்டாயே என்னிடமிருந்து...
அத்தனையும் பெரிதல்லடீ உன்னைவிட..!
மொத்தமாக கேட்கவில்லை எதையும் உன்னிடமிருந்து.
கொடுப்பேன் கொடுப்பேன்...
என்று கொடை வள்ளல் போல் பெசியவளே..!
நீ ஒன்றும் பெரிய வள்ளல் இல்லை... நீ ஓர் சாதாரண வியாபாரி தான்...!
ஏனென்று கேட்கிறாயா என்னை ஏமாற்றியவளே..?
உன் இதழைத் தந்தென் நினைவுகளை எடுத்துக்கொண்டாய்..!
உன் புன்னகையைத்தந்தென் புத்தியனைத்தையும் பறித்துக்கொண்டாய்..!
உன் தேன் குரலால் மதுமயக்கம் தந்தென் மனதைத் திருடிக்கொண்டாய்..!
உன் இதயத்தைத்திணித்தென் உயிரையும் உருவிக்கொண்டாய் ..!
நீ வள்ளல் அல்ல ஒரு கைதேர்ந்த வியாபாரியே..!!
எழுத்து தளத்தின்
நடு நிலையாளர் திருமதி சியாமளா ராஜசேகர்
அவர்களுக்காக இந்த பதிவு .........
*************************************************************************
எழுத்து நடை மேடையில்
வெண்பா படைத்து
சான்றோர் ஆனீர் !!!!
அக அன்பால்
அனைத்து கவிஞர்களுக்கும்
அன்னையானீர்!!!!!
மனதில் உறுதி
எழுத்தில் இனிமை
நடையில் வீரியம்
தந்தது உமக்கு
தரமான
நடுநிலையாளர் பதவியை ....
விழுவதெல்லாம்
எழுவதற்கே தவிர
அழுவதற்கல்ல என
ஆணித்தரமான
கொள்கையோடு
வெற்றி நடை போட்டீர் !!!
எழுத்துக்களில்
தேன் தொட்டு
சித்திரம் வரைந்தீர்
உம்மை நீர்
நேசித்ததால் !!
கவலைகள்
அவசரமான சுகாதாரமற்ற
சுயநல சூழலில்
பொறுமை நம்மில் பலருக்கும்
பாகற்காய் தான் ....
வரிசையில் நிற்க
பொறுமை இல்லை
உறவுகளை உன்னதமாக்க
பொறுமை இல்லை
பேருந்திற்காக காத்திருக்க
பொறுமை இல்லை
முடிவுகளுக்காக காத்திருக்க
பொறுமை இல்லை
பொறுமையாய் இருக்க
பொறுமை இல்லை
பெற்ற செல்வங்களுக்கு நேரம் செலவிட
பொறுமை இல்லை ..
அன்பு காட்ட
பொறுமை இல்லை
கணவன்மார்களிடம்
விவாதிக்க பொறுமை இல்லை
நிகழ் கால பொறுமை இன்மை
எதிர் கால இருள் ...
கடவுளிடம் வேண்டினேன்
எனக்கு பொறுமையை கொடு
ஆனால்
சீக்கிரம் கொடு என
அதற்கும் பொறுமை இல்லை
பொறுமை
கோபத்தில்
கதாநாய
அணிகலன் அல்ல ....
கரப்பான் பூச்சி கலன்....
நகை சுவையல்ல
நகைச்சுவை தான்
ஆரோக்யமான சுவை ..
இந்த அணிகலனை செய்ய
செய் கூலி இல்லை
சேதாரம் இல்லை
ஆச்சாரி இல்லை
பெரும்பாலான கணவர்கள்
இல்லத்திலேயே செய்து விடுவார்கள் ....
கருவில் இன சுமை
பள்ளியில் கல்வி சுமை
கல்லூரியில் காதல் சுமை
வாழ்க்கையில் இன்னல்கள் சுமை
பணியில் பணி சுமை
முதுமையில் தனிமை சுமை
இறப்பில் வலிகள் சுமை
பின் எது தான் சுவை ?
சுமைகளை சுவையாக
மாற்றும் மன வலிமை தான் சுவை !