கைதேர்ந்த வியாபாரிநீ

கொடுப்பேன் கொடுப்பேன்...
என்று கொடை வள்ளல் போல் பெசியவளே..!
நீ ஒன்றும் பெரிய வள்ளல் இல்லை... நீ ஓர் சாதாரண வியாபாரி தான்...!
ஏனென்று கேட்கிறாயா என்னை ஏமாற்றியவளே..?

உன் இதழைத் தந்தென் நினைவுகளை எடுத்துக்கொண்டாய்..!
உன் புன்னகையைத்தந்தென் புத்தியனைத்தையும் பறித்துக்கொண்டாய்..!
உன் தேன் குரலால் மதுமயக்கம் தந்தென் மனதைத் திருடிக்கொண்டாய்..!
உன் இதயத்தைத்திணித்தென் உயிரையும் உருவிக்கொண்டாய் ..!

நீ வள்ளல் அல்ல ஒரு கைதேர்ந்த வியாபாரியே..!!

எழுதியவர் : கீதாஞ்சலி (3-Sep-15, 12:41 pm)
பார்வை : 78

மேலே