சவால்கள் ===சாதனைகள்

கதிர்வீச்சு
கருவி இல்ல்லாமலே
உணர்வுகளை
தத்ரூபமாய்
படம் பிடிக்கும்

தாயாய்=====

தூய்மையான அன்பை
மன சோர்வில்லாமல்
மணம் கமழும்
சாம்பிரானியாய் இல்லத்தில்
வீசும்

இல்லத்தரசியாய் ========

வலிமையுடன்
திறமையுடன்
தனித்தன்மையுடன்
உணர்வுகளை
உன்னதமாய்
கையாளும்

மனைவியாய் =======

கூட்டத்தோடு நடந்தால்
கூட்டம் செல்லும் வரை தான்
நடக்க முடியும் என
தனியாய் நடந்து
அனுபவங்களால்
அனைத்தையும் அலசி
பொறுப்புகளை
பொறுப்பாய்
சுமக்கும்

குல விளக்காய்=========

அடக்கமாய்
அதிகாரமாய்
உறுதியாய்
உன்னதமாய்
அலுவலகத்தில்
ஆடம்பரமற்ற
ஆணித்தரமான

அதிகாரியாய் ========= .

பொறுமை
பெருமை என
மௌனத்தில் உழைத்து
வெற்றியின் ஒலியில்
மௌனம் கலைத்து

முடியாது என்பது
கிடையாது
எப்படி செய்யலாம் என
எட்டி நின்று திட்டமிட்டு
சவால்களை சந்திக்கும்

கதாநாயகியாய்==========

இலக்கை
திசை திருப்பாமல்
மாசுக்களை
மனதில்
ஊடுருவாமல் தடுத்து
நினைத்ததை முடித்து காட்டும்

சாதனையாளராய்========

அன்பு - அரவணைப்பு
அமைதி -- அதிகாரம்
பொறுமை - விடாமுயற்சி
மன முதிர்ச்சி - மன வலிமை
தேக ஆரோக்கியம் - மன ஆரோக்கியம்

அனைத்து
மூலப்பொருட்களையும்
அன்றாடம் சேகரித்து
வேண்டிய
விகிதத்தில் கலந்து

இல்லறம்
எனும்
நல்லறத்தை
அறுசுவை
உணவாய்
படைத்து

சந்திக்கும்
சவால்களை
சாதனைகளாய்
மாற்றும்

பணிக்கு செல்லும்
பெண்களுக்கு
ஒரு சபாஷ் போடுவோம் !!!!!!!!

எழுதியவர் : கிருபா கணேஷ் (3-Sep-15, 8:47 pm)
பார்வை : 271

மேலே