பிரியாவிடை வாழ்த்து கவிதை

மண்ணில் தோன்றும்
மனிதர்கள் உருவில்
கடவுளைக் காணலாம்
என்பதன் அர்த்தம் உணர்ந்தோம்
உங்கள் பார்வையில்
அதுதான் இங்கு
எத்தனையோ குழந்தைகளின்
இதயங்களிலும் மருத்துவப்பால்
ஊட்டுகிறீர்களே !!!

எளிமையை உடுத்தும் உங்கள்
உடைகளின் வெளிச்சம்
ஏழ்மைக் குழந்தைகளின் இதயங்களில்
ஒளிர்கிறது.....

கடின உழைப்பில் ஒரு "கடிகாரம்"
கனமான பேச்சு திறத்தில்
சிறந்த "ஆளுமை"
கனிந்த உள்ளம் கலந்த தன்மையில்
ஒரு "தாய்மை"
உதவும் கரங்களால் பிறரை
நேசிக்கும் போது நமக்கு
ஒரு ""தெரேசா""....

அன்பின் வழியே
ஆண்டவனைக் காணலாம்
எங்கள் குழந்தைகளோ
நோயின் வழியே
உங்களைக் காண்கிறார்கள்

செய்யும் தொழில்
தெய்வம் என்னும் பணியில்
செய்யல் நிறை தையல் நீங்கள்...

வார்த்தைகளால் வடிக்கமுடியா
வானத்துயர்
வாழ்த்துக்கவிதை நீங்கள்....

கருணையின் வடிவம்
உங்களைப்போலவே
குழந்திகள் தான் எதிர்கால
விருட்ஷம் என்றார் அப்துல் கலாம்
அதுதானோ இந்த
சிறுவர் விடுதியில் உங்கள்
மருத்துவ உலா.....

நீங்கள் ஒரு விசித்த்ரக் கலவை
கருணை, நேர்மை,
தொழில், தர்மம்
அடக்கம், ஆளுமை
அன்பு ,பண்பு
எல்லாம் சரிசம விகிதத்தில்...

அப்பப்பா.......
எத்தனை எத்தனை சேவைகள்

இதயங்களில்
துவாரங்களால் துன்புற்ற
குழந்தைகளின்
சத்திர சிகிச்சைக்கு உதவும்
சரித்திரத்தை எந்த இதயங்கள்
மறக்கும்...

எண்ணம் இவ்விடுதியாக
எடுத்தியம்பும் வண்ணம் ஒரு
"விளையாட்டறை"
சிறுவர் மகிழ்ச்சிக்காக....

நாகரிக உலகில்
புட்டிப்பால் குடித்த குழந்தைகள்
வளம் பெரு "தாய்ப்பால்"
பரிகிக்கொண்டு இன்று
தாயின் மணிக்கொடியை
பற்றிக்கொள்ள வைத்தது
நீங்களே .........!

உண்மையில் பாரதி கண்ட
கனவுகளின்
ஒருமித்த கவிதைகளின்
"ஒளிவிளக்கு" நீங்களே........

உளநல தேவனை கரம்பற்றி
குடும்பநல
உதவிகரம் கோர்க்கும் உங்கள்
உளவியல் திறனை
என்னவென்பது....

கடிகாரத்தை பொய்யாக்கிவிடும்
உங்கள் சேவையின்
கருவாளம் புகுத்திவிட
என்னதவம் செய்தனரோ
உம்பெற்றோர்

இப்போது எங்களைவிட்டு
பிரிவதாய் எண்ணாதீர்கள்
எங்களை வளர்த்து ஆளாக்கி
சேவையில் விட்டுச்செல்கிறீர்கள்
உங்கள் சேவையின் வெளிச்சம்
எங்களில் மிளிர்வது நிச்சயம்..

வெற்றி தேவதையே
உங்களைச் சுற்றி வெற்றிகள்
இருக்க எங்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....

குழந்தை நல வைத்திய நிபுணர் டாக்ட்ர் திருமதி சாந்தினி கணேசன் அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் இருந்து பிரியாவிடை பெற்று செல்லும் போது வாசிக்கப்பட்ட வாழ்த்து...

எழுதியவர் : Ramesh Sivagnanam (4-Sep-15, 4:51 pm)
சேர்த்தது : nalina
பார்வை : 17942

மேலே