நற்குஞ்சரத்தமிழ்
வல்லினம் புகுந்து இடையினம் பயின்று
மெல்லினம் கூறும் சொல்லினமிது
மெல்லச்சொல்லினும் வெல்லச்சொல்லினும்
வெறும் வார்த்தையாய் உரைக்காது
உள்ளத்தின் உணர்வுகள் உயிர்பெற உணர்விக்கும்
உள்ளக்கதவுகளை விசாலத்திறக்கும்
உயரம் கற்றாலும் தாழ்வு பகன்றாலும்
தள்ளாடுவதில்லை எம் தமிழ்
இன்று தரை பிரித்தோடும் ரத்தச்சகதியின் மேல்
கலி பிடித்தாடும் மனிதப்பேய்களின்
காலடியோரம் விசும்பலோடு மறையுது
புதைக்கும் விதை கூட ஏதோ ஒரு நாள்
முளைக்குமாம் சூழல் உயிர்க்கும் போது
ஆம்! புதைக்கப்பட்ட …இல்லை
நசுக்கப்பட்ட நம் தமிழும்
நற்குஞ்சரத்தேரேறும் நம் நா உயிர் பெறும் போது......