கற்க கசடற
கற்க கசடற
கற்றபின்
கையேந்தி நிற்காதே
பிச்சையெடுக்க !
கற்றாரை கற்றாரே
காமுறுவர்
ஆதலினால்
கல்லாதாரை கல்வியில்
காதற் கொளச் செய் !
ஊழிற் பெரு வலி
யாவுள ?
ஆயினும்
உறுதியான உள்ளத்தை
எதிர்ப்பவை உலகில்
யாவுள ?
----கவின் சாரலன்