குறளைத் தொடர்ந்து
இரந்தும் உயிர் வாழ்தல்
வேண்டின்
உலகில் அரசுகள் இருந்தும்
இல்லாததிற்கு நிகர் !
முகநக நட்பது
நட்பன்று அந் நாளில்
முக நூலில் கொள்வதே
நட்பு இந் நாளில் !
தந்தை மகர்க்கு ஆற்றும் நன்றி
கல்வி வாழ்வில்
முன் நிற்க செய்தல்
மகன் தந்தைக்கு ஆற்றும் நன்றி
முதியோர் இல்லத்தில் தள்ளுதல்.!
-----கவின் சாரலன்