நட்பின் சுவாசிப்பில்...

ரோஜாவின் இதமான
வாசம்...
நுனிக்கால் வருடும்
கடலலை...
முகில் மூடிய
வானம்...
இதமாய் உரசிடும்
தென்றல்...
அமைதியில் காதோர
அருவிச்சத்தம்...
இரவினை பகலாக்கும்
முழுமதி...

ஆம்
இதயத்தை இறகாக்க
இறைவன் கொடுத்த
இவை யாவும்
நட்பின் சுவாசிப்பில்...

எழுதியவர் : இவன் (25-May-11, 9:54 pm)
சேர்த்தது : சகா சலீம் கான்
பார்வை : 882

மேலே