இயற்கை அன்னைக்கு ஒரு கடிதம்
இன்று ... இந்த நிமிடம் ... இந்த நொடி ...
நான் இறந்துவிட்டாலும் கவலையில்லை.
இப்பொழுது நான் ஒரு உயரமான மலையுச்சியிலிருந்து எழுதுகிறேன்
எனை சுற்றிலும் மலை காடுகள் ,
இந்த அதிகாலை வேளையில் பள்ளத்தாக்கினுடே
சுதந்திரமாய் பறந்து செல்கின்றன பறவைகள் ,
சூரியன் மெல்ல எட்டி எனை பார்த்து சிரிக்கின்றான்.
கொள்ளையடித்து செல்லும் தென்றல்
எனை கட்டித் தழுவுகின்றது .
ஆஹா !!!
இந்த நிமிடம் ... இந்த நொடி
நான் இறந்துவிட்டாலும் கவலையில்லை
இயற்கை அன்னையே
உன் மடியில் நான் ஒரு குழந்தையாய்
மலையும் காடும்
வயலும் சமவெளியும்
பறவையும் வானும்
கடலும் அருவியும்
ஆறும் ஏரியும்
வற்றா நதிக்கரையும்
நிலவும் தென்றலும்
கதிரவனும் வண்ணமும்
மரமும் காற்றும்
மழையும் சாரலும்
இப்படி எல்லாமுமாய்
நீ எங்களுடன் கலந்திருக்கிறாய்
ஆனால் முளையற்ற மாந்தர்கள் நாங்கள்
உன்னை அணுஅணுவாய் கொல்கிறோம்
டிஸ்கோ தேக்கும் பெண்களும் தான் வாழ்க்கை எனும் இளைஞர்கள்
பாதையில்லா மலையில் பயணிக்க வேண்டும்
வேலை வேலை என்று அடித்துகொள்ளும் வியாபார புள்ளிகள்
மறைந்திருக்கும் தனியான ஏரியில் குளிக்க வேண்டும்
இப்படியே இங்கு உட்கார்ந்து கொண்டு
வாழ்க்கை முழுக்க எழுத வேண்டும்
என்ற விருப்பம் எனக்கு
அனால் நானும் மானிட மாயை உலகில் விழ வேண்டும்
பேருந்து, புகை , நெரிசல் சாலை என்று திரும்ப வேண்டும்
என்றும் நீ என்னோடு இருப்பாய் என்று நம்பி
உன்னை விட்டு பிரிய மனதில்லாமல் பிரியும்
என்றும் தூய்மையான அன்புடன்
உனது மகன்
- கார்த்திக் -