காதல்
இளமை என்னும் பருவத்தில்
இனிமை என்னும் ராகத்தில்
இதயம் என்ற கோட்டையில்
உயிர் என்ற மேடையில்
உணர்வென்னும் பாடலை
கண்கள் இசைக்க
உள்ளம் கொண்ட கதவுகள் திறந்து
ஜீவனெங்கும் வியாபித்து
சுவாசம் கலந்து
மனம் என்ற கருப்பையில் உயிர் கொண்டு
மௌனம் என்ற மொழியில்
பகிரப்பட்டு பிறப்பெடுக்கும்
இரு மனம் விரும்பி அணியும் காதல் என்ற பொன்விலங்கு