அன்னைக்கு ஒரு கடிதம்

அடுப்படி தாண்டி அகிலம் காணாதவளே...
கண்டவன் சொல்கிறேன் கேள்...

நாடுண்டு... எல்லையுண்டு...
எல்லை தாண்டினால் சண்டையுண்டு...

வீடுண்டு... வாசலுண்டு... கூடுண்டு...
அடைகாக்கும் குடும்பமுண்டு...
தன் மகனை இளவரசனாகவும்...
தன் மகளை இளவரசியாகவும்...
எண்ணும் பெற்றோருண்டு...

நண்பர்களுண்டு... நையாண்டியுண்டு...
மாற்றார் நகைப்பின் எதிர்க்கும் தோழமையுண்டு...

உறவுண்டு... பிரிவுண்டு... ஊடலுண்டு... கூடலுண்டு...
அனைத்திலும் தோள் கொடுக்கும் உறவும் நட்பும் உண்டு...

இனமுண்டு... பிரிவுண்டு... மொழிஉண்டு...
அதைக் காக்கும் உணர்வுண்டு...
அதற்க்காக சண்டையிடும் உரிமையுண்டு...

நேர்மையுண்டு... எளிமையுண்டு... வலிமையுண்டு...
வாக்கில் இனிமையுண்டு...

சட்டம் உண்டு...
அதைக் காக்கும் சமூகமுண்டு...
மீறினால் தண்டிக்கும் அரசாங்கமுண்டு...

இயற்கை வளமுண்டு...
அதைக் காக்கும் தளராத மனமுண்டு...

தொழில் உண்டு...
அதை தெய்வமாய் பேணும் தொழிலாளருண்டு...
அவர் நலனுக்காய் போராடும் அரசியலுண்டு...

பண்பாடு மாறாது... நல்லவற்றை மட்டுமே எழுதியிருக்கிறேன்...

இருக்கும் உலகில் இல்லாமையும் உண்டு...
மேற்கூறியவை யாவும் நிறைந்து இல்லாமல் சில வேறுபாடுகளுமுண்டு...

என்னிடம் உள்ளவை...
நானே சமைக்கும் உணவுண்டு... தேவைக்கு மருந்துண்டு...

உன்னுடன்
உரையாட கைப்பேசியுண்டு...
காண skype உண்டு...
ஊரில் வீடு சரிசெய்ய சிறிது பணமுண்டு...

உடன் இல்லாத
தாய், தந்தை, இனம், மொழி, ஊர், மக்கள்,
இவற்றைப் பற்றி எண்ண இயலாத நிலையில் வேலையுண்டு...

எழுதியவர் : Balaji Ramamurthy (4-Sep-15, 4:09 pm)
பார்வை : 728

மேலே