உனக்காக

உந்தன் கை பட்டால் போதும் என் கவி பக்கம் நீளும்....

உந்தன் உதடு அசைத்தாலே போதும் என் கவி இன்னும் பலம் கூடும்....!

உந்தன் விழி பார்வைக்காக என் கவி வரிகள் ஆற்றைப் போல் ஓடும்....!


கவி பக்கம் நீளும்...
பலம் இன்னும் கூடும்...
ஆற்றைப்போல் ஓடும்...

என் மனம் உன்னை நாடும்....
காதல் மொழி பாடும்....

அமுதே உன் அழகிற்கு ஈடில்லை எதுவும்...

ஆசைகள் தான் எனக்கும் ஆராய்ந்து விடவும்....
வழி ஒன்றும் இல்லை அது தானே தொல்லை....

அழகிற்கே அழகெற்றும் அழகல்லவா நீ....

புகழ் பாட முடியாத புகழ் அல்லவா நீ....

அன்பின் அன்பல்லவா நீ...

முடிவில்லா தொடர் நீ....

தொலைத்தூர நிலா நீ....

கவிக்குள் மறைந்திருக்கும் கவி நீ....

கனவுக்குள் மறைந்திருக்கும் கனவு நீ....

எதை இன்னும் சொல்ல நான் சொல்லும் சொல் எல்லாம் நீ....

முடிவோடு தொடங்கிவிட்டாய் என்னில் முடிவில்லா முடிவாய் நீ....

உனக்காக சில துளிகள் அது தானே என் கவி துளிகள்....

அன்பே என்றும் உன் அன்பில்.....









!...உன்னோடு நான் உனக்காக நான்...!

எழுதியவர் : தர்ஷா ஷா (4-Sep-15, 9:06 pm)
Tanglish : unakaaga
பார்வை : 276

மேலே