நாங்கள் அடையும் புகழ்களுக்கு உரியவர்கள் நீங்கள்

எததனை ஆயிரம் ஆசிரியர்கள்-ஆனால்
நோக்கம், லட்சியம் ஒன்று தானே
என் மாணவன் முன்னேற வேண்டும்
தேர்ச்சிப்பெற வேண்டும்
வெற்றி பெற வேண்டும்
ஆஹா !
எத்தனை உயரிய எண்ணம்
நீங்கள் அல்லவா
வணக்கத்துக்குறியவர்கள்


எத்தை கேலிகள்
எத்தனை கிண்டல்கள்
எத்தனை துன்பங்கள், தொல்லைகள்
உங்களுக்கு செய்தோம்
இன்று நினைக்கையில்
என் உள்ளம் வலிக்கிறதே
உங்கள் காலில் விழுந்து
மன்னிப்பு கோருகிறோம்
எங்களை மன்னியுங்கள் - ஐயா

இன்று வரையிலும் , இனிமேலும்
நாங்கள் காணும் வெற்றிகளுக்கு
நாங்கள் அடையும் புகழ்களுக்கு
உரியவர்கள் நீங்கள் தானே - ஐயா !

எழுதியவர் : (5-Sep-15, 11:32 am)
பார்வை : 24503

மேலே