கீறல் விழுந்த மனதில் நிலையான ஆசான் -முஹம்மத் ஸர்பான்

அன்புக்கு அன்னையாக வருத்தத்தில்
தோல் கொடுக்கும் நண்பனாக
வாழ்க்கைக்கு வழிகாட்டும் தந்தையாக
நினைவுகளில் கலந்த தெய்வம் நீ,

உனக்கு ஒரு பூஜை செய்யவேண்டும்,
நான் பெற்ற பட்டங்களை உன்
காலடியில் வைத்து.................

மலராக சிரிக்கும் மாணவனை
வாசம் மாறாமல் காக்கும் சோலை
அல்லவா நீ......!!!!

உலகம் ஆயிரம் புத்தகம் உள்ள
நூலகத்தை வியப்பாய் பார்க்கிறது,
நடமாடும் அறிவின் அருவியை
யாரும் கண்ணெடுத்து பார்ப்பதில்லை.

விண்ணில் விளக்குகள் ஆயிரம்
இருந்தாலும் ஒற்றை நிலவுக்கு
தான் பெறுமதி அதிகம் என்பதைப் போல்
பள்ளி எனும் நிலவில் அறிவின்
வெளிச்சமாய் மின்னும் ஆயிரம்
தாரகைகள் நீங்கள்.

ஆசானை போற்றி எவனும் எழுதிவிடலாம்
பேசி விடலாம் ஆனால் வாழ்க்கையில்
அவனுக்கு நன்றிக்கடன் செலுத்துபவர்கள்
எம்மில் எத்தனை பேர்.

முதலெழுத்து தந்தவை உயிர்
எழுத்து முடியும் வரை மறவாதே!!

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (5-Sep-15, 12:09 pm)
பார்வை : 249

மேலே