ஆசிரியர் தின மடல்
கற்றதை மாணவர்களுக்கு கற்பிப்பவர்
ஆசிரியர்...
கல்வியில் கவனத்தை ஊக்குவிப்பதும் ஆசிரியர்..!
சந்தேகங்களை தீர்த்து வைப்பதும்
ஆசிரியர்... உனக்கு
சட்டம் ஒழுங்குகளை கற்று தருவதும்
ஆசிரியர்..!
மரத்தடியில் பாடம் சொல்வதும் ஆசிரியர்...
உன்
மனதில் மனப்பாடமாகும் வரை
போராடுவதும் ஆசிரியர்..!
பெற்றோருக்கு அடுத்த இடமே ஆசிரியர்... நீ
பெயில் (Fail) ஆனாலும் பாஸ் (Pass) ஆக போராடுவதும்
ஆசிரியர்..!