மனம் கொண்ட அழுக்கை கழுவ மண்ணில் ஒரு மழை வேண்டும்

பாதையில் உமிழ்ந்த எச்சில்களை
பறவைகள் கழிந்த எச்சங்களை
மனித மிருகங்களின் மலங்களை
மனிதம் மடிந்ததால்
மண்ணில் படிந்த இரத்தங்களை

இன்னும் எத்தனையோ அழுக்குகளை
கழுவிக் கொண்டு வந்தது
காலையிலிருந்து பெய்த கணமழை

அதோ
குடை மறந்ததால் மழை நனைந்தவளின்
மெய் மொய்க்கும் ஈக்களாய் ஈனக் கண்கள்

இப்போது
மனிதன் கொண்ட
மன அழுக்கை கழுவ முடியாமல்
தோற்று மரித்து வெறித்தது மழை

எழுதியவர் : மணி அமரன் (5-Sep-15, 7:04 pm)
பார்வை : 225

மேலே