பேராசான் கண்ணன்
இன்று ஆசிரியர் தினம்!
ஆசிரியர்களை வணங்குவோம்! வாழ்த்துவோம்!
முதலில்
அண்டத்துக்கே பேராசான் கண்ணனை வாழ்த்துவோம்!
இன்று கண்ணனின் பிறந்த நாள்!
கண்ணன்
பகவத் கீதையின் ஆசானாய்ப் பிறந்த நாள்!
தலைசிறந்த கல்வியை போதித்தவன் பிறந்த நாள்!
நற்கதி அடைவதற்கு மூன்று வழிகள் சொன்னான்!
தர்மத்தைக் காக்க செயலிலேயே லயித்திரு என்று
கர்ம யோக வழி காட்டினான்!
இன்பத்தையும் துன்பத்தையும் சமமென்று நினைக்கும்
ஞான யோக வழி காட்டினான்!
இருக்கும்போதெல்லாம் இறைவனையே துதித்திரென்று
பக்தி யோக வழியும் காட்டினான்!
இல்லறத்திலேயே துறவறம் சாத்தியம்!
காட்டுக்கு ஓடாதே என்று விளங்கச் சொன்னான்!
ஆன்மா அழியாதது எனும் பேருண்மை உணர்த்தினான்!
காலத்தால் அழியாத
தலையாய கல்வியாய்
மனித இனத்துக்கு
கீதையைத் தந்த
பேராசான் கண்ணனை
வாழ்த்துவோம்! வணங்குவோம்!
அவன் பிறந்த இந்நாளில்!
ஆசிரியர் நன்னாளில்!