உற்சவம்
* முற்றிலும் துறந்த ஓர் முனியும்
உன் முகந்தனை கண்டால்
தவம் கலைந்து தாகம் உயிர்த்தெழும்..
* நீ கண்ணயரும் பொழுதினை
ரசிக்க நிலவும் நீடித்தொழுகும்
தேன் நிலவென உருமாறும்.
* சந்திரனோ, சூரியனோ, மன்மதனோ, மானுடனோ உனைக்கண்டால் உருகுலைவான்..
* கசிந்துருகும் காலையில்
கனவுகள் கலைந்தெழும் வேளையில்.. நீ கண்மலர
அந்த கதிரவனே உனை
கவர முயற்சிப்பான்..
* உன் கரம்படவே காத்திருக்கும்
அனுதினமும் பூத்திருக்கும்
உன் தோட்டத்து பூவுடன்
நானும் ஓர் ஓரமாய்..
* உன் மனம் - கல்லோ, இரும்போ நானறியேன்..
காதலெனும் - உளியும், நெருப்பும் என்னுள் வியாப்பித்திருக்க..
* தயக்கம் சிறிதொன்றும் இல்லை என் காதலை உன்னிடம் பறைசாற்ற..
ஆம்- என்னவளே உன்னை நான் ஆழமாய் அதி ஆழமாய் நேசிக்கறேன்..
----**********---------**********----------