ஐநா சபைக்கு ஓர் அவசரக்கடிதம்
அன்புடன் ஐ.நா சபைக்கு!
ஆசையில் ஓர் அவசரக்கடிதம்
இலங்கையிலிருந்து எழுதுகிறேன்
ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி....
உங்கள் எண்ணம் எதுவாயினும்
ஊழல் இல்லாது செயற்படுவீர்கள் என
எண்ணி எண்ணியே வாழும்
ஏமாந்த தமிழர் நாம் தானோ!
ஐயம் தீர்க்க வேண்டுகிறேன்
ஒழுக்கமுள்ள சபையாக
ஓர் உயிர்க்கும் நீதிதவறாத சபையாக
ஒளடதத்தை வளங்கவேண்டுகிறேன்
*****************************************************
தமிழனுக்கு தமிழனே துரோகியாகலாம் -ஆனால் ....!
தமிழ் உயிரோடு நீங்கள் உலக அரசியல் செய்யாதீர்கள் !
தண்டனை கொடுப்பது எம் நோக்கமல்ல மாறாக
தண்டனையிலிருந்து யாரும் தப்பிக்கமுடியாது
என்பதை நிரூபியுங்கள் ...!!!
நீதி கிடைக்கவேண்டும் என்பதே நோக்காகும் ....
********************************************************
சிரியாவில் சிசுவின் மரணம்
கண்ணீர்விட்டு கலங்குகிறீர்கள்
நேபாளத்தில் பசுமரணம்
தெய்வகுற்றம் என்கிறார்கள்
ஈழத்தில் எத்தனை சிசுக்கள்?....
இலங்கையில் எத்தனை பசுக்கள்?....
இருப்பவர்களை காக்கும் பெயரில்
இறந்தவர்களை கேலி செய்யாதீர்கள்.!
*************************************************
உன்னிப்பாக கவனித்த உலக நாடுகளே!
நீங்களும் கைவிட்டால் ...........!
இறைவனின் திருவிளையாடல்கள்
உங்களுக்கும் உரித்தாகும்.......