நீ வரும் பாதையில் ஏங்குகிறேனடி நான் 555

என்னவளே...

என் கிறுக்கல்களை வாசிக்க
தெரிந்த உனக்கு...

காதலையும் உன்னால்
நேசிக்க முடியும்...

பூகம்பங்களுக்கு இடையில்
நீ பூத்தாலும்...

மலரே என் கிறுக்கல்களில்
உனக்கு இடமுண்டு...

என் வீட்டு ஜன்னலின்
தென்றலுக்கு பதில்...

நீ எப்போது என்னை
தழுவி செல்வாய்...

ஏங்குகிறேனடி நீ
வரும் பாதையில் நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (5-Sep-15, 7:55 pm)
பார்வை : 80

மேலே