நான் சாகவில்லை

இல்லை
நான் இந்த கடலி்ல்
மூழ்கி இறக்கவில்லை
என் தேசத்தினின்றும்
அகதியாக்கப்பட்டவர்களின்
கண்ணீரில் மூழ்கி
மூற்சையாகியுள்ளேன்
.
எனக்காக என் தாய்
சுவனத்தில் காத்திருப்பாள்
அவளுக்காய் காெண்டு செல்ல
என் கைகளில் ஏதுமில்லை
என் தாய் எனக்கு கடைசியாய்
அணிவித்தழகு பார்த்த
என் உடைகளை தவிர....
.
களற்றி வீசாத என்
கலணிகளில் யாருடையவோ
தாேல்விகளின் ஆரம்பம் தெரிகிறது
ஷாம் நகரின் வீதிகளில்
எம் சிவந்த பாதச்சுவடுகள்
நாளைய வெற்றி
வரலாற்றைச் சாெல்லும்
.
என் தாய் எனக்காக
சுவனத்தில் காத்திருப்பாள்
நானும் அவளும்
என்த தேசத்தின் வெற்றைய
ஒருசேர காண்போம்....
.

எழுதியவர் : அபூ ஃபஹத் (5-Sep-15, 8:19 pm)
Tanglish : naan sagavillai
பார்வை : 121

மேலே