கண்காணிப்பில் அலட்சியம் சரிவில் இலட்சியம்

" கண்காணிப்பில் அலட்சியம்...சரிவில் இலட்சியம் "

வட்ட வடிவ மூங்கில் வேலி - அது
கட்டப்பட்ட உயரம் குதிரைக்கு சமம் - அதில்
இட்டப்படி ஓடி ஆடி பாடும் குதிரைகள் 500 - அதை
சட்டப்படி பாதுகாக்க காவலாளி வேலிக்கு வெளியில்

குதிரைகள் வேலியை...

முட்டிமுட்டி மோதினாலும் தன்னை
தட்டிக் கொடுத்து தன்னையே ரசிப்பான்
கெட்டிக் கதவு தாழ்ப்பாளில் இருக்கும்
கெட்டிக்கார மரக் குச்சி பார்த்து...

ஆத்திரமும் அவசரமும் யாரை விடும்
மூத்திரம் கழிக்க பத்தடி அப்பால் சென்றான்

குதிரைகளின் பாடல்கள் காதைப் பிளக்கவே
குதிரை போல் ஓடி வந்தான்
குதிரைகள் வெளியில் ஓடுவதைக் கண்டு நொந்தான்

வேலியோ காலி வேலிக்குள் ஒரு குதிரை இல்லை
சோலி போச்சே ஐயோ என்று கீழே விழுந்து அழுதான்

கதவு தாழ்ப்பாளில் இருந்து கீழே விழுந்த மரக் குச்சி
காதகனை பாதகன் கண்காணிப்பை பார்த்து கனைக்கிறது

( கொசுறு 1 : குதிரை ஒன்றின் விலை ரூபாய் ஒரு லட்சம் இருக்கும் )

(கொசுறு 2 ; கதவுக்கு இரவில் பூட்டு போடுவது வழக்கம். இதற்கு முன் வந்த ஆத்திர அவசரத்துக்கு சக ஊழியரை அழைத்து பெஞ்சில் அமரச் செய்து 100 அடி அப்பால் கூட செல்வான். அன்று அதை மறந்தான். )

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (6-Sep-15, 7:32 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 27

மேலே