உன் இதயத்தில் துகளாய் இருந்துவிட்டு செல்கிறேனடி 555

என்னவளே...
உன்னை மட்டும் தொடர்ந்து
வந்த என்னை...
நீ திரும்பி கூட
பார்ப்பதில்லை...
நீ என்னை பலமுறை அவமானம்
படுத்தியும் பார்த்துவிட்டாய்...
முடியவில்லையடி நிஜமாய்
சொல்கிறேன்...
நீ என்னை எவ்வளவு
திட்டி தீர்த்தாலும்...
மனதுக்குள் ஓரமாய்
ஒடுங்கிவிடும்...
உன்னை பற்றிய கனவுகளும்
நினைவுகளும் என்னில்...
உன் இதய என்னும்
தேசத்தில்...
நான் எங்கவாவது ஒரு துகளாய்
இருந்துவிடவே ஆசைபடுகிறேனடி...
ஒருமுறை செல்லாமாக
சொல்லிவிட்டு செல்லடி...
என்னை
பிடிக்கவில்லை என்று...
வாழ்ந்துவிடுவேன்
நான் இந்த ஜென்மம்.....