உரு மாறிய உருவம்

உரு மாறிய உருவம் - சிறு கதை

அன்று மாலை எட்வின் வழக்கம்போல் நடைப்பயிற்சி முடித்துவிட்டு களைப்பாக வீட்டிற்குள் வந்து, செருப்பைக் கழற்றினார். அவரை கவனித்த எலிசா, அவரில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை கவனிக்க வில்லை. சுட சுட தேனீர் கொண்டு வந்து கொடுத்தபோது எலிசா அதிர்ந்தாள். எட்வின் கண்ணில் பயத்துடன், முகம் கறுத்து எதையோ இழந்தது போல அதிர்ச்சியில் உறைந்திருந்தார்.

எட்வினுக்கு வயது 57. இவரும் இவரின் மனைவி எலிசாவும் அரசு அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் நல்ல படிப்போடு, வேலையிலும் இருந்தார்கள். அன்று வழக்கம்போல நடைபயிற்சிக்கு சென்றிருந்த எட்வின், இயற்கை எழில்மிகு பூங்காவை சுற்றி வந்தார். பின் பறவைகளோடு சிறிது நேரம் பேசியதோடு, அதன் அழகையும் ரசித்துவிட்டு அதே மகிழ்ச்சியில் வீடு திரும்பினார். அவர் ஏதோ ஞாபகத்தில் சாலையில் வந்த வாகனத்தை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்ற போது யாரோ அவரை இழுத்து சாலையின் ஓரத்தில் தள்ளினார். அதிர்ச்சியில் மயங்கி, பின் விழித்த எட்வினுக்கு சுற்றி இருந்தவர்கள் நடந்த உண்மையை தெரிவித்தாhக்ள். வேகமாக வந்த வாகன விபத்திலிருந்து தன்னை காப்பாற்றியது யார்? என்று வினவினார். சுற்றியிருந்தவர்கள் சாலையின் ஓரத்தில் சோகம் கலந்த களைப்போடு நடந்த சென்ற உருவத்தை கை காட்டினார்கள்.

வேகமாக நடந்து சென்று உருவத்தை வழிமறித்தார். அவரின் பெயரை கேட்டு அவரைப்பற்றி விசாரிக்க முயன்ற எட்வின், அவரின் கையில் உராய்ப்பு ஏற்பட்டு இரத்தம் வழிந்ததைப் பார்த்து தன்னைக் காப்பாற்ற போய் ஏற்பட்ட காயம் என்பதை புரிந்து கொண்டார். தன் உயிரை காப்பாற்றிய அந்த நபருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்திலும் பதட்டத்திலும் தன் பையிலிருந்த ATM card-யை எடுத்து கொடுத்து அதன் pass word-யையும் எழுதி கொடுத்து எவ்வளவு வேண்டுமோ எடுத்துக் கொள் என்றார். அதனை வாங்க அந்த நபர் மறுக்க, அதனை உரிமையோடு அவரின் சட்டைப் பையில் திணித்தார். உயிர் பிழைத்த அந்த உணர்வை எப்படி வெளிப்படுத்த என்று தெரியாமல் இவ்வாறு செய்திருந்தார். மகிழ்ச்சியில் அவரின் பெயரையோ, முகவரியோ கேட்கவில்லை. ஆனால் அந்த நபர் சலனமின்றி சாலையில் நடந்து மறைந்தார்.

வீடு திரும்பி, தேநீர் அருந்தி கொண்டே நடந்ததை வீட்டில் உள்ளவர்களிடம் பகிர்ந்தார். மனைவியும், பிள்ளைகளும் கோபத்தில் முறைத்தவாரு காப்பாற்றியதற்காக ATM Card-யையா கொடுப்பது? என்று வினவினர். மகளின் பிறந்தநாளுக்கு நகை எடுக்க வேண்டிய பணம் முழுவதும் அதில்தானே உள்ளது என்று எலிசா கணவனை கடிந்து கொண்டார்.

அவசரப்பட்டு விட்டுட்டோமோ என்று எட்வின் எண்ணிக் கொண்டிருக்கையில், மகனின் யோசனைக்கு செவிகொடுத்தார். அதன்படியே மறுநாள் காலை 09.00 மணிக்கெல்லாம் வங்கி சென்று ATM-ல் இருந்த பணத்தினை வேறு கணக்குக்கு மாற்றிவிட்டு, அதில் 5000 மட்டும் மீதி வைத்தார், எடுத்தாலும் 5000 மட்டும் அந்த நபருக்கு போகட்டும் என்று. பின் நிம்மதியோடு தன் வேலைக்குச் சென்றார். ATM-ல் இருந்த 5000 எடுக்கப்பட்டதா? என்று தினமும் தன் கணக்கை சரிபார்த்து வந்தவருக்கு ஒரு சிறு மன உளைச்சல். ஒரு வாரமாகியும் 5000 அப்படியை இருந்தது. நாள்கள் பல ஓடின, மாதங்களும் கடந்தன. தன் ஊயிரை காப்பாற்றியவருக்கு ஒன்றும் செய்ய முடியவில்லையை என்று எட்வின் வருந்தினார். மாதங்கள் பல கடந்ததால் தன்னை காப்பாற்றியவர் எங்காவது தென்படுவாரா? என்று ஏங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக அவரின் உருவமும் எட்வின் நினைவிலிருந்து மறைந்து கொண்டிருந்தது.

ஜார்

எழுதியவர் : ஜார் (6-Sep-15, 9:28 pm)
சேர்த்தது : ஜோசப்
பார்வை : 153

மேலே