கருவறை
ஏனடி என்னை
வெளியேற்றினாய்
உள்ளே இருட்டுதான்
ஆனால் அன்பு வெளிச்சம்
உள்ளே ரகுமான் இல்லை
ஆனால் அப்பாவின் முத்தஇசை
உள்ளே கலவரம் இல்லை
ஆனால் உன் அன்பான கதறல்கள்
உள்ளே பூவும் இல்லை
ஆனால் அதை உன் சுவாசம் தந்தது
உள்ளே நான் கைதிதான்
அன்பெனும் போலிஸ்தானோ நீ
கருவறை எனும் கோட்டை அரசி
என் முதல் முத்தசொந்த காரீ
ஏனேம்மா என் அம்மா ...
----------சிபி