அம்மா
கருவறையில் வளரும் போதே கண்ணே மணியே
என்று கொஞ்சினாய் ...
பெற்றெடுத்த உடனே அழகாய் எனக்கு
பெயரும் தேடினாய் ....
என் பிஞ்சி விரலின் ஐந்தின் நடுவில் ஆறாவதாய்
உன் சுட்டு விரல் ...
மொழிகள் அறியும் முன்னே உன் புன்னகையில்
பல மொழி கற்று கொண்டேன் ...
உன் குருதியை எனக்கு கொடுத்து
உயிரே தந்தாய்...
இடுப்பில் இருந்து இறங்க மனம் இல்லை
இருந்தாலும் இறங்கினேன்
வளர்த்து விட்டேன் என்றதால்
என் கண்ணங்கள் ஈரமாகும் நீ தந்த முத்தத்தால்
உன் கண்ணங்கள் ஈரமாகும் நான் கீழே விழுந்த சத்தத்தால்
அம்மா......!