தாயின் மரணம்

ஈரைந்து திங்களாய் இருந்து என்னை ஈன்றவள்
நூறைந்து சென்மமாய் வாழ்கவென்று வாழ்த்தினேன்
கூன்விழுந்து குழிவிழுந்து ஊணிழந்து போகினாள்
தழழிறைந்து வேகவிட்டேன் என்னமாயம் மாயமோ....

ஊட்டி வளர்த்த வளீமைக்கு நிற்கிறேன்
காட்டிற் சுடர்தீயை காட்டுங் கோளிங்கிட
மாருப் பாலீந்தென்னை தூக்கி வளர்த்தாளே
யாரப்பா வந்தெந்தன் தாயை எழுப்புவார்....

மாட்டுச் சாணத்தின் மேல்மல்லாங்கி தூங்கிடும்
வீட்டுக் காணக்குயில் வீடற்று போகினாள்
காட்டுச் சிதையுக்குள் தீயைமூட்டும் முன்னே
தீட்டு முறிந்திட யாரு எழுப்புவார்....

சந்தனங் குங்குமம் பூசியவள் உன்னை
சாத்திய சாணியும் வாசமண்றோ- என்னாத்தாளே
மாண்டப் பின்னாரும் இல்லை என்றோயாதே
உன்பிள்ளை என்றும் உண்டு....

தொப்புட் தொட்டிலுக்குள் வைத்தென்னை காத்தவள்
தொந்தி சரிந்திட வந்து விழுந்தனன்
நொந்து கதறியும் தாயவள் இங்கில்லை
அந்திப் பொழுதுக்குள் ஆரிங்கெழுப்புவர்....

வாயுமுடிந்த துந்தேயு வைத்துமென்ன
வாடாவா என்பிள்ளை என்றவளே- சாம்பல்
ஆகுநீயே தீயைமூட்டுகிறேன் வாடாதே
ஆத்தாளே ஈசனடி போ....

எழுதியவர் : அரவிந்த் (10-Sep-15, 1:45 pm)
பார்வை : 1073

மேலே