உலகப் பொருளாதாரத்தை உருக்குலைக்க வரும் சீனா

உலகின் இரண்டாவது பொருளாதார நாடாக விளங்கும் சீன பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும் இந்நாட்டுக் கொள்கை வகுப்பாளர்கள் திணறி வருவதால், உலகளவில் உள்ள முதலீட்டாளர்கள் சீன சந்தைக் குறித்து அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

சீனா பொருளாதாரம் சரிந்தால், உலகின் பிற முக்கிய நாடுகளும் தங்களின் பொருளாதார வளர்ச்சியில் தொய்வு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் ஜப்பான் ஆகியவை அதிகளவில் பாதிக்கும். ஏனெனில் இந்நாடுகளுக்குத் தொழிற்துறை வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கு உறுதுணையாக இருப்பது சீனாவும், இந்தோனேஷியாவும் தான்.

உதாரணமாக, சீன பொருளாதாரத்தின் வளர்ச்சி 1 சதவீதம் குறைந்தால், அமெரிக்கா 0.2 சதவீதம் வரை தாராளமாகக் குறையும், அதேபோல் ஐரோப்பிய சந்தை 0.1 - 0.15 சதவீதம் வரை குறையும்.

இதன்பின் ஜப்பான், இந்தியா, தைவான், ஆஸ்திரேலியா ஆகியவை உள்ளது.

நடப்பு நிதியாண்டில் சீனா 6.8 சதவீதம் வரை உயரும் எனச் சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இது 1990ஆம் ஆண்டுக்குப் பின், மதிப்பிடப்படும் குறைவான வளர்ச்சி. ஆனால் சீனாவை பொருத்த வரை இந்நாட்டின் வளர்ச்சி அளவு 7 சதவீதமாக இருக்கும் என அறிவித்துள்ளது. 2000ஆம் ஆண்டுகளின் மத்தியில் சீனா 2 இரண்டு இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது சீன கொள்கை வகுப்பாளர்களிடம் 20 வருடங்களுக்குப் பின்னுக்குத் தள்ளப்பட்ட சீன பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியை இயல்பு நிலைக்குக் கொண்டு வர ஏதேனும் வழிகள் உள்ளதா என்பதே சந்தேகமாக உள்ளது எனப் பொருளாதார வல்லுநர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்துக் கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகத்தின் பொருளாதார வல்லுநர் ஷங் வான் சான் கூறுகையில், சீனாவின் வளர்ச்சி 7% ஆகக் குறைந்தால் உலகம் நின்றுவிடாது. தற்போதைய நிலையில் சீனா மந்தமான வளர்ச்சியில் மட்டுமே இருக்கிறது. எனக் கூறினார். மேலும் அவர் சீன அரசு தற்போது தனது பொருளாதாரம் மற்றும் நிதியியல் சந்தையைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

2008-09ஆம் ஆண்டுக் காலத்தில் நிலவிய நிதி நெருக்கடியில் சீன அரசு, பொதுத்துறை வங்கிகள் நிறுவனங்களுடன் இணைத்து கடன் உதவியுடன் சாலை, வீடு மற்றும் தொழிற்சாலைகளைக் கட்டத் தொடர்ந்து அனுமதி வழங்கியது. இதனால் பொதுத்துறை வங்கிகளில் கார்பரேட் கடன் அளவு அதிகரித்தது. இங்கே தான் பிரச்சனை துவங்கியது.

இதன் பின் வங்கிக் கடன் அளவைக் குறைக்க அரசு, நிறுவனங்களைப் பங்குச்சந்தையில் அதிகத் தொகைக்குப் பட்டியலிட்டு சீன அரசு தவறு செய்தது. பட்டியலிடப்பட்ட நிறுவனம் வர்த்தகத்தில் பின்தங்கிய உடன் சந்தையில் பங்குகளின் மதிப்பு தாறுமாறாகக் குறைந்தது. இதனால் சீன பங்குச்சந்தை நிலை உருக்குலைந்து போனது. இதனை மறைக்கச் சீனா பல முயற்சிகள் செய்தும் தோற்றுப்போனது.

இத்தகைய மந்தமான பொருளாதார நிலையைக் களைய அளவிற்கு அதிகமாக மதிப்பிடப்பட்ட சீனா நாணயத்தை, சந்தை முதலீட்டாளர்களுக்கு இணங்க மதிப்பைக் குறைத்தது. இதனால் உள்நாட்டுச் சந்தையில் ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் குறையவே ஏற்றுமதி அளவைக் குறைத்தனர். இதனால் வர்த்தகம் முழுமையாகப் பாதிக்கப்பட்டது.

நாணய சரிவின் மூலம் சீன சந்தையில் தொழிற்துறை உற்பத்தி மற்றும் கட்டுமானம் துறையின் வளர்ச்சி அதிகளவில் குறைந்தது. இதனால் சீன சந்தையில் நிலக்கரி, ஸ்டீல், காப்பர் மற்றும் பிற பொருட்களின் தேவை குறைந்தது.

இத்தகைய மந்தமான பொருளாதார நிலையைக் களைய அளவிற்கு அதிகமாக மதிப்பிடப்பட்ட சீனா நாணயத்தை, சந்தை முதலீட்டாளர்களுக்கு இணங்க மதிப்பைக் குறைத்தது.

இதனால் உள்நாட்டுச் சந்தையில் ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் குறையவே ஏற்றுமதி அளவைக் குறைத்தனர். இதனால் வர்த்தகம் முழுமையாகப் பாதிக்கப்பட்டது. நாணய சரிவின் மூலம் சீன சந்தையில் தொழிற்துறை உற்பத்தி மற்றும் கட்டுமானம் துறையின் வளர்ச்சி அதிகளவில் குறைந்தது.

இதனால் சீன சந்தையில் நிலக்கரி, ஸ்டீல், காப்பர் மற்றும் பிற பொருட்களின் தேவை குறைந்தது. நாணய மதிப்பீடு.. இதனைத் தொடர்ந்து இந்தோனேஷியா, பிரேசில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பியா, தைவான், தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் உற்பத்தி மற்றும் வளர்ச்சி பாதித்துள்ளது. சீனா பொருளாதாரத்துடன் ஐரோப்பிய சந்தைக்குக் கிரீஸ் நாட்டின் கடன் நிலுவை மற்றும் தேர்தல் பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையாக விளங்குகிறது.

எழுதியவர் : செல்வமணி (7-Sep-15, 9:37 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 247

சிறந்த கட்டுரைகள்

மேலே