சிறு முதலீட்டில் தொழில் தொடங்க ஆசையா இதோ 8 அட்டகாசமான ஐடியாக்கள்

நம் நாட்டில் மட்டுமல்ல, இந்த உலகில் சொந்தத் தொழிலை செய்பவன் மட்டுமே பெரும் கோடீஸ்வரனாக ஆகிறான். ஆனால், சொந்தமாக ஒரு தொழிலில் ஈடுபட நினைக்கும் பெரும்பாலானவர்கள் சரியான முதலீடு இல்லாமல், மாதச் சம்பள வேலைக்குச் சென்று அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சிறு முதலீட்டில் கூட தொழில் தொடங்கி, சூப்பரான லாபம் அடைவதற்கான பல வழிகள் நம் நாட்டில் உள்ளது. அவற்றில் எட்டு தொழில்கள் குறித்துப் பார்க்கலாமா?

டிராவல் ஏஜென்சி இந்தத் தொழிலைப் பற்றிய சில நுணுக்கங்களை அறிந்து வைத்திருந்தாலே போதும். சுமார் ஐந்துக்கு ஐந்து அறைக்குள் இருந்து கொண்டே, சிறு முதலீட்டில் லட்சம் லட்சமாக சம்பாதிக்க முடியும்.

நிதி நிறுவனங்கள் இன்சூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்டு, பங்கு வர்த்தகம் உள்ளிட்ட பல தொழிகளும் இதில் அடங்கும். இந்தத் துறைகளில் நல்ல ஞானம் இருந்தாலே போதும், மிகமிகக் குறைவான முதலீட்டில் நிறைய சம்பாதிக்க முடியும்.

ரியல் எஸ்டேட் இந்தக் காலத்தில் இத்தொழிலின் வளர்ச்சியைக் குறித்து சொல்லவே தேவையில்லை. ஆரம்பத்தில் ஒரே ஒரு மொபைல் போன் மட்டும் இருந்தால் கூடப் போதும். வீட்டிலிருந்தே கொள்ளை கொள்ளையாகச் சம்பாதிக்கலாம்.

பியூட்டி பார்லர் மற்ற சிறு தொழில்களை விட இதில் கொஞ்சம் அதிக முதலீடு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், ஒரு முறை உங்கள் தரத்தைக் காண்பித்து விட்டால் போதும். செமையாகக் கல்லா கட்டி விடலாம்.

மொபைல் ரீசார்ஜ் இந்தத் தொழிலைப் பற்றியும் அதிகம் கூறத் தேவையில்லை. முக்குக்கு முப்பது மொபைல் ரீசார்ஜ் கடைகள் புற்றீசல் போல் முளைத்துக் கொண்டு வந்தாலும், ரீசார்ஜ் செய்ய வரும் கூட்டத்திற்குக் குறைவே இல்லை. இதுபோன்ற கடைகள் வைத்து தொழில் நடத்தவும் அதிக முதலீடு தேவையில்லை.

ஜாப் ஏஜென்சி நாட்டில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் படிப்பை முடித்து விட்டு, வேலை தேடி அலைகிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை அறிமுகப்படுத்தும் ஒரு முக்கியப் பணியை வேலைவாய்ப்பு நிறுவனம் தொடங்குவதன் மூலம் செய்து கொடுக்கலாம். இதிலும் முதலீட்டிற்கான தொகை மிகமிகக் குறைவே!

டியூசன் வகுப்புகள் இப்போதெல்லாம் பள்ளியில் படித்தது போக, டியூசனுக்கும் தங்கள் குழந்தைகளை அனுப்பிப் படிக்க வைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் அதிகம். இது ஒரு தொழிலாகவே மாறி விட்டது கவலைக்குரிய விஷயம்தான் என்றாலும், படிப்பறிவை மட்டுமே வைத்துக் கொண்டு, தினமும் ஓரிரு மணி நேரம் செலவு செய்தாலே அதிகமாக சம்பாதிக்க முடியும் என்பதுதான் உண்மை!

ஈவண்ட் மேனேஜ்மெண்ட் தற்போதுதான் சிறிது சிறிதாக இந்தத் தொழில் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதிக முதலீடு தேவையில்லை. திறமையும், சில தொடர்புகளும் இருந்தால் போதும். இந்தத் தொழிலில் ஜொலிக்கலாம்.

எழுதியவர் : செல்வமணி (7-Sep-15, 9:46 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 257

மேலே