குழீஇயவான் விண்ணோர்க்கு வேந்தனா மிவ்வுலகம் விட்டு - ஏலாதி 33

நேரிசை வெண்பா

பொய்யுரையான் வையான் புறங்கூறான் யாவரையும்
மெய்யுரையா னுள்ளனவும் விட்டுரையான் - எய்யுரையான்
கூந்தன்மயி லன்னாய்! குழீஇயவான் விண்ணோர்க்கு
வேந்தனா மிவ்வுலகம் விட்டு 33

- ஏலாதி

பொருளுரை:

மயிற்றோகையைப் போன்ற கூந்தலையுடைய பெண்ணே! பொய் சொல்லான்; எவரையும் இகழான்; ஒருவரையும் புறம்பாக இழித்துப் பேசான்; பிறர் துன்பத்தை நீக்குதற்காக நடந்த உண்மையைச் சொல்லான், தன்மாட்டு உள்ள பொருள்களையும் வெளிப்படுத்துச் சொல்லான், நண்பன்மாட்டுந் தன் வறுமையை வெளிப்படுத்தானாகிய இவன் இம்மண்ணுலகத்தை விட்டு நீங்கி மேலுவலகத்திற் கூடியுள்ள தேவர்களுக்குத் தலைவனாவான்.

கருத்து:

பொய்யாமை முதலியன உடையான் இந்திர வாழ்வில் வைகுவான்.

கூந்தலை மயிற்றோகைக்கே ஆக்கியுரைப்பினுமாம்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Dec-24, 9:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

மேலே