காந்தி புதுக்குறள்

சத்தமின்றி கத்தியின்றி கடமையிலே தொய்வின்றி
சுதந்திரமே கண்டார் காந்தி

கசையடிகள் பலபெற்றும் கலங்காமல் முன்னின்று
இசைபடவிடு தலைக்கண்டார் காந்தி

அன்னியரின் ஆடைகளை அடுக்கடுக்காய் குவித்தே
அனலிட்ட புரட்சியாளர் காந்தி

கைராட்டை சுற்றியே கதராடைப் பூட்டியே
காலமெல்லாம் வாழ்ந்தார் காந்தி

காட்சிக்கு எளிமையுடன் நாட்டுக்கு உழைத்தவரே
காசினியே போற்றிடும் காந்தி

காலாலே உதைத்தவர்க்கும் தன்கையால் தைத்திட்ட
காலனியை தந்தவர் காந்தி

எளிமையொடு சிக்கனத்தை இருகண்ணாய் எண்ணியே
ஏழையையும் நேசித்தார் காந்தி

எவ்வுயிரும் தன்னுயிராய் இவ்வுலகில் உள்ளவரை
எண்ணியே அன்பிட்டார் காந்தி

உண்மையைக் கடைபிடித்து பொய்மையை தினம்தவிர்த்து
உள்ளமெலாம் நிறைந்தார் காந்தி

அகிம்சையாம் ஆயுதத்தால் அந்நியரை விரட்டியே
மகிழ்ச்சியைத் தந்தவரே காந்தி

எழுதியவர்
பாவலர் . பாஸ்கரன்

எழுதியவர் : (7-Sep-15, 10:26 pm)
பார்வை : 62

மேலே