மலரல்ல, முள்
விழியால் காதல் விதைஎடுத்து,
உள்ளத்தில் காதல் செடி வளர்த்தேன்...
உதிரம் குடித்து வளர்ந்த செடி
வளர்ந்த பின்னே தெரிந்ததடி
மலரல்ல, முள்ளென்று...
வெட்டி எறிந்து மருந்திட்டேன், இருந்தும்
வேர் படர்ந்த வடு மாறவில்லை..
முள் தைத்த வலி ஆறவில்லை..
எறிந்த செடியோ வாடவில்லை..
என் மரணத்துடன் வலி நீங்குமோ,
இல்லை
எரியூட்டிய என் பிணம்
கருகிய பின்னும் வலிக்குமோ...