கவிதைகளுக்கே ஒரு கவிதை

ஒரு கருவை
விதையாக்கி
மொழியையே
மண் வளமாக்கி
சிந்தனையெனும்
நீர் பாய்ச்சி
வளர்க்கப்படும்
செடிகளும் மரங்களுமோ
இந்தக் க(ரு)விதைகள்!

வண்ண மலர்களைக்
கொண்ட செடிகளாய்
எண்ணங்களின்
வண்ணங்களைப்பிரதிபலிக்கும்
கவிதைகளும்

பசிதீர்க்கும்
கனி மரங்களாய்
அறிவுப் பசி தீர்க்கும்
காவியக்கவிதைகளும்

காதலியைக்கைப்பிடிக்க
உதவும்
காதல் கவிதைகளும்

காதலி
வந்த பின்
மோகக்கவிதைகளும்
விலகிச்சென்றால்
சோகக்கவிதைகளுமாய்

இத்தனை கருக்களுக்கும்
உருவங்களாய்
இந்தக்கவிதைகள் !

எழுதியவர் : PG வெங்கடேஷ் (7-Sep-15, 10:03 pm)
பார்வை : 69

மேலே