என் ஸ்ட்ரேங்க்ளர் அத்தி மரமே

என் ஸ்ட்ரேங்க்ளர் அத்தி மரமே!
முதல் பார்வையிலே !
என் உச்சிதனை முகர்ந்தாய்.....
என் உடல் பொருள் ஆவியில்
எல்லாம் உன் உயிரை கலந்தாய்...
என்னோடு பின்னி பிணைந்ததால்
என் மூச்சு பேச்சின்றி நின்றது...
உயிரை உன்னிடத்தில் தந்துவிட்டு
என் உடலான மரம்
உன் மனதிடம்
களவாடப்பட்டு விட்டது...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நீ வாழ
நான் சாவதில்
தவறேதும் இல்லையே.....
நீ எனை
அரவணைக்கும்
வேளை
நான்
போகிறேன்
சொர்க்கத்திற்கு...
~~~~~~~~~~~~~~~~~~~~~~
I am a tree...
You are my strangler fig...
Your birth is start my head...
You grown up to my body...
You hug for me...
That moment i was died(Go to Heaven).
My soul transfer to your soul...