வீழ்வதற்கல்ல -கார்த்திகா

வீழ்வதற்கல்ல -கார்த்திகா

இலைகளிலிருந்து நழுவும்
பனித் துளிகளில்
தவழ்கிறாய் நீ

செம்பூக்களின்
வாசனை இழப்பில்
அடர்ந்த நிறங்களாய்
நெருங்குகிறாய்

தீக் குச்சிகளின்
பொறி ஒப்புவித்தலில்
எரியும் வெந்தணல் நீயானாய்

உன்னைக் கொண்டு
பிறக்கின்றன வீழாத
நிலவுக் கூட்டங்கள்

பூக்களிலே மலர்ந்து
தீயினிலே சுடர்விடும்
அஞ்சாத நம்பிக்கையாய்
நீயே!!

எழுதியவர் : கார்த்திகா AK (8-Sep-15, 7:34 am)
பார்வை : 544

மேலே