வாழ்க்கை என்பது
தன் சிறகை விரித்து
மேலே மேலே பறக்கிறது
படபடக்கத் தெரியாமல் ....விமானம்
வெண் புகையை வெளி விட்டு
சிட்டாய் பறக்கிறது
சிலிர்த்திடத் தெரியாமல் ....ஏவூர்தி
ஊர்ந்து செல்கிறது
கரும்புகை விட்டு விட்டு
நத்தை போல் சுருண்டிடத் தெரியாமல்..தொடர்வண்டி
நான்கு கால்கள்தான்
நாலே பாய்ச்சல் சிலநேரம்
எருமைபோல் நகர்வது பல நேரம்
ஊரையே கவ்விக்கொண்டு மூச்சு விடமுடியாமல் திணறும் ஓடும்
.......சிற்றுந்து
பேருந்துவண்டிகள்
இத்தனை வசதிபடைத்த உலகில்
வாழ்வதுதான் சாதனையா?
தூய காற்றோடு கலக்கும் புகைமண்டலத்தால்
மூச்சு இழுத்தும் முடியாமல் முடிந்தும் சாவது
புகையே நமக்கு பகையாய் வாழ்க்கை.