வினா

சகல நன்மையும் புரிவோன்
சர்வேசன் என்றுரைத்து
சஞ்சரிக்கும் சான்றோர்காள்...

களை புரை ஊதாரிகள்
கோடி நூறுகளில் உருள…
கலை செறி உழைப்பாளர்
தெருக்கோடி புரள்வதேனோ..?

சீமான் வாழ்க்கை
சாதி மல்லியோ..?
மஞ்சம் தங்கிட...

வறியோன் வாழ்வு
வாடா மல்லியா..?
மயானம் தாங்கிட...

இது  நன்மையோ..?
நன்மையின் திரிந்த தன்மையோ..?

எழுதியவர் : அஞ்சா அரிமா (9-Sep-15, 8:14 am)
பார்வை : 102

மேலே