அறியாமையால் விளையும் நிகழ்வுகள் - உதயா

காட்சிகள் ஒவ்வொன்றாய்
குறைந்த காலத்தில்
பொளிவியந்து போகிறதே

கண்களின் குறைபாடா ...?
காட்சியின் குறைபாடா ...?

பல கோடி மகரந்த சேர்க்கைக்கு காரணமாய்
தகவல் பரிமாற்றத்தில் தலை சிறந்தவராய்
உலகில் மிகுந்த நினைவு திறன் உடையவராய்
வளம் வந்த தேனீக்களும் அழிந்து போகிறதே

தேனிகளின் விதியா ...?
காலத்தின் சதியா .?

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
என்ற தத்துவத்தை பாரெங்கும் பரவ செய்த
சிட்டுக் குருவிகளும் குறைந்து போகிறதே

தொழில்நுட்ப வளர்த்தியின் மிகுதியா ...?
நல் குணத்திற்கு அளிக்கப்பட்ட வெகுமதியா ...?

இயற்கையின் இராஜாங்கத்தில்
எழில் ஓவியங்களை அலங்கரித்த
பசுமை மழலைகளின் மணங்களில்
துற்மணங்கள் இணைந்துவிடாமல்

மாருதம் தம் பரிசுத்தத்தை
பாரெங்கும் இழந்துவிடாமல்
நோய்களின் தாக்குதல்கள்
மனிதர்களை தொட்டுவிடாமல்

இறந்த சீவன்களை மட்டும் உணவாக்கிக்கொள்ளும்
பிணந்திண்ணிக் கழுகினங்கள் அழிந்தே போனதே

செயற்கையின் வளர்ச்சியா ...?
இயற்கையின் வீழ்ச்சியா ...?

நாளை ஓர்நாள்
உலகமே அழிய போகிறதே

மனிதன் உலகிற்கு அளிக்கப் போகும் ஓய்வா ...?
உலகம் மனிதனுக்கு அளிக்கப் போகும் தண்டனையா ...?

எழுதியவர் : உதயா (9-Sep-15, 11:45 am)
பார்வை : 256

மேலே