பெயருக்கு மரியாதை

பெயருக்கு மரியாதை
=======================
’காதலுக்கு மரியாதை’ன்னு படம் எடுத்துப் பணம் சம்பாதிக்கறாங்க. நான் ’பெயருக்கு மரியாதை’ன்னு ஒரு சிறு உரையாடல் கலந்த கட்டுரையை தமிழ்ப் பணி மன்றத்தில் பதிவு செய்கிறேன். மொழிப் பற்றுக்காக.
--------
ஏண்டா உம் பேர திடீர்ன்னு ’ஜிஜி’ -ன்னு மாத்திட்ட?
டேய் இந்திக்காரங்க பாரு டெண்டுல்கர், கவாஸ்கர் -ன்னு
பேருல மரியாதையைக் குறிக்கும் ‘ர்’ -அய் சேத்துக்கறாங்க.
இல்லன்னா அவுங்க பேரோட ‘ஜி’ - என்ற விகுதியைச் (suffix)
சேத்துக்கறாங்க. அந்த மாதிரி தான் ‘சிவா’ சிவாஜி ஆகிறார். ‘ஜி’
என்ற விகுதி ’அவர்கள்’, ‘அவர்களே’ என்ற அர்த்தங்களைக்
கொடுக்கும். நாம் பேசிக்கொண்டிருக்கும் போது நமக்கு பதில்
சொல்லவேண்டிய நபர் ‘ஜி’ என்றால் ’ஆமாம்’ என்று
பொருள்படும்.
அதே போல தெலுங்குக்காரங்க ஒருவர் பெயரைக் குறிப்பிடும்
போது ‘அவர்கள்’ அவர்களே’ என்ற பொருள் தரும் ‘காரு’ (gaaru)
என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். உ.ம்: ராமா ராவ் காரு
(ராமா ராவ் அவர்கள்).
தமிழர்களாகிய நாமும் மேடைத் தமிழிலும் எழுதும் போதும்
ஒருவர் பெயரைச் சொல்லி அல்லது எழுதி ’அவர்கள்’
என்ற மரியாதைக்குரிய சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
உ..ம்.: இலக்குவனார் அவர்கள், திரு.வி.க அவர்கள், தலைவர்
அவர்ளே.
ஆனா நாம பேச்சு வழக்கில் ஒருவரைக் குறிப்பிடும் போது அவர்
பெயருக்கு முன்னால் மிஸ்டர் சோலையப்பன் என்று தான்
சொல்கிறோம். திரு. சோலையப்பன் அவர்கள் என்று
சொல்வதில்லை. இந்திக்காரங்களும் தெலுங்குக்காரர்களும்
பேச்சு வழக்கிலும் அவர்களே என்று பொருள் படும் ‘காரு’ என்ற
சொல்லையும். ‘ஜி’ என்ற விகுதியையும் சொல்லத்
தவறுவதில்லை. இதற்கும் தெலுங்கின் ஆணிவேர தமிழ் தான்.
சம்ஸ்கிருத கலப்பு அதிகம் உள்ளதால் நமக்குப் புரியவில்லை.
ஆனால் தூய மலையாளத்தில் தமிழ்ச் சொற்களே அதிகம். பல
தமிழ்ச் சொற்கள் திரிந்து இருந்தாலும் நம்மால் எளிதில் புரிந்து
கொள்ளமுடியும். உ..ம்: பட்டி என்றால் ‘பெண் நாய்’ என்று
பொருள். நாம் சாவி என்று சொல்வதை மலையாளத்தில்
தாக்கோல் என்பர். இது தாழ்க்கோல் {தாழ்ப்பாளைத் திறக்கும்
கோல்} என்பதன் திரிபுச் சொல்.
சாவி என்பது தூய தமிழ்ச் சொல் இல்லையென்று
நினைக்கிறேன். தாக்கோல், பட்டி :இவையிரண்டும்
பழமையான தமிழ்ச் சொற்கள்தான் .
அது சரி நீ ‘ஜிஜி ’ஆனதப்பத்தி சொல்லுடா.
டேய் எங்க அப்பா பேரு ஜீவராஜன். எம்பேரு ஜீவகுமார். எனக்கு
’ஜீ. ஜீவகுமார்’ -ன்ற பேரு பிடிக்கல. என் பெயருக்கு இரட்டை
(double) மரியாதை வேணுமின்னு எம்பேர ‘ஜிஜி’ -ன்னு
மாத்திட்டேன்.
சரிப்பா. பெயருக்கு மரியாதைங்கிறது இது தானா?