தாய் மொழியில் பேசுவதில் பெருமைப்படுவோம்

தாய் மொழியில் பேசுவதில் பெருமைப்படுவோம்
=============================================
பிரான்ஸ் நாட்டில் ”6 கோடி 65 லட்சம், சுமார் 66 சதவீதம்
கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் 9 சதவீதம்,
யூதர்கள், புத்த மதத்தினர் தலா 7 சதவீதம். பேசும் மொழி
பிரெஞ்சு. ஆங்கிலம் தெரிந்தாலும், பிரெஞ்சில் பேசுவதில்
பெருமைப்படுபவர்கள். உறவை வளர்க்கச் சிறந்த வழி,
அவர்களிடம் பிரெஞ்சில் உரையாடுவது” - நன்றி எஸ்.எல்.வி.
மூர்த்தி (’புரட்சி பூமியில் வாய்ப்புகள் ஏராளம்’) என்ற
கட்டுரையில்.
--------------------------
தமிழ் நாட்டில் தமிழர்களின் நிலை என்ன என்று எண்ணிப்
பாருங்கள் நண்பர்களே. சமூகத் திரைப் படங்கள் வந்த
நாளிலிருந்து வளமையான, தொன்மையான நம் தமிழை
முடிந்தவரை சிதைப்பதையே குறிக்கோளாகக்
கொண்டிருக்கிறார்கள்.
இன்று
போக்குவரத்து இல்லாத சிற்றூர்களில்கூட கல்வியறிவு
இல்லாதவர்களும் ஆங்கிலச் சொற்களைத் தேவையின்றிக்
கலந்து தமிழ்ப் பேசும் அவலநிலை. கற்றவர்களும் நம் தாய்
மொழியைச் சீரழிப்பதில் தான் குறியாக உள்ளனர். தமிழில்
ஆயிரக்கணக்கான அழகான பெயர்கள் இருந்தும் பிற மொழிப்
பெயர்களையே தம் பிள்ளைகளுக்குச் சூட்டி, பிற மொழி
பேசுவோர் நம்மை ஏளனமாக நினைக்கும்படி செய்கிறார்கள்.
முதலில் தமிழ் ஆசிரியர்களும், தமிழ்ப் பேராசிரியர்களும், பிற
ஆசிரிய, பேராசிரியப் பெருமக்களும், கற்றவர்களும் தங்கள்
பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டினாலே போதும்.
கல்வியறிவு இல்லாதவர்களும் மாறி திரைப் படங்களில்,
தொலைக்காட்சித் தொடர்களில் வரும் பாத்திரங்களுக்கு
வைக்கப்படும் பிறமொழிப் பெயர்களைத் தங்கள்
பிள்ளைகளுக்கு சூட்டமாட்டார்கள். தமிழ் மொழியையும்
பண்பாட்டையும் சீரழிப்பவர்களே கற்ற, கல்வியறிவுள்ள
தமிழர்கள் தான். இது பெருமைப்படக்கூடிய செயல் அல்ல. தாய்
மொழியில் பேசுவது கேவலமான செயல் அல்ல.

எழுதியவர் : மலர் (9-Sep-15, 3:42 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 127

சிறந்த கட்டுரைகள்

மேலே