தாய்மொழி அவமானமா வினோதன்

வெறிகொண்ட கண்ணும்
குறிகொண்ட நகமும் என
உமிழ்நீர் ஊற்றியபடியே
இளைப்பாறியபடி இரைதேடி
படுத்திருந்தது ஓர் நாய் !
வரி போர்த்திய புலியின்
உறவாம் பூனையொன்று
தன மகவோடு கதைத்தபடி
கொழுத்த உணவுதேடி
உலாவிக் கொண்டிருந்தது !
இம்மூன்றும் - ஓர் புள்ளியில்
சந்திக்க நேர்ந்தது !
ஓடத்துடங்கிய பூனையையும்
அதன் மகவையும்
துரத்த துவங்கியது நாய் !
"வவ், வவ்" என்று
குறைத்தைபடி - மிக
வேகமாக துரத்திய
நாயைவிட வேகமாக
ஓடிய தாய் பூனை
ஒரு கட்டத்தில் நின்றது !
திகைத்த நாய் - மூச்சு
வாங்க முறைந்து நிற்க,
அப்பூனை - தாய்மொழியாம்
"மியாவ்" விட்டுவிட்டு
"வவ், வவ்" என்றவுடன்
தெரிந்து ஓடியது நாய் !
தாய்ப் பூனை, தன மகவை
நோக்கி பெரிமிதமாக திரும்பி
"இதுதான் இரண்டாம் மொழியின்
முக்கியத்துவம்" என்றது !
ஆங்கிலம் என்றால் என்னவென்றே
தெரியாமல் வாழ்வோர் நடுவே,
ஆங்கிலம் தெரியவில்லை எனில்
உயிர் வாழவே முடியாது என்று
முட்டாள் தனமாக நம்பும்
அறிவு ஜீவிகளும் உண்டு !
தாய் மொழியில் சிந்திக்காத
ஒரு சமூகம் - முன்னேறுவது
போகாத ஊருக்கு வழியாகும் !
பணம் சம்பாதித்தல் தான்
வாழ்வென போதிக்கப்பட்ட
சமூகத்தில் வாழ்கிறோம் !
அதற்கான ஒரே வழி
ஆங்கிலம் கற்பது தான்
என்றும் மூளைச்சலவை
செய்யப் பட்டிருக்கிறோம் !
கற்று தொலைவோம் !
தாய் மொழியாம் தமிழ் மறந்து
அடையாளம் தொலைத்தா ?
தாய் மொழியாம் தமிழ் ஆதாரம்
ஆகாரத்திற்காக விற்று விடாதீர் !
தமிழ் போற்றுவோம் !!!
( நண்பர்களே, மேற்சொன்ன நாய் பூனை கதையை முகப்புத்தகத்தில் ஒரு பேச்சாளர் சொன்ன கதை. நிற்க...கொரியா, ஜப்பான், சீன, அமேரிக்கா, ரஷ்யா என நாம் பெரிய, முன்னேறியா நாடுகளாக நினைக்கும் அனைத்துமே தத்தம் தாய்மொழியில் தான் அனைத்து விடயங்களையும் செய்கின்றன. ஆங்கிலத்தில் வெளிவரும் அனைத்தையும் மொழி பெயர்த்து தத்தம் தாய்மொழிகளில் மக்களுக்கு தருகிறார்கள் ! ஆனால், நாம் என்ன செய்கிறோம் ? ஆங்கிலம் கற்றால் தான் வாழ முடியும் என்று போதிக்கிறோம். கற்றுக் கொடுங்கள்...தாய் மொழியில் எழுதவோ , பேசவோ தெரியாத பிள்ளைகளை வளர்ப்பது உங்கள் குமுகாய தகுநிலைக்கு உகந்ததாக இருக்கலாம்...ஆனால் அது தான் உண்மையா ?
தாய் மொழியால் கட்டமைக்கப்பட்ட சமூகங்கள் தான் இன்று உலகை ஆள்கின்றன...தாய் மொழி மறுத்த எந்த சமூகமும் முன்னேற வாய்ப்பே இல்லை...ஏனெனில் நாம் ஆங்கிலம் தெரிந்த தொழிலாளர்களை தான் உருவாக்கி கொண்டிருக்கிறோம்...முதலாளிகளை அல்ல ! யோசிப்போம்...எடுத்துரைப்போம்...தாய் மொழி போற்றுவோம்)
- வினோதன்