இதமாயொரு சுகமே

தமிழுக்கென பணியாற்றிடும் தமிழன்பரின் படைப்பில்
அமிழ்தின்ருசி குறைந்தேவிடும் அருமைக்கவிச் சுவையில்
சிமிழுள்திரி ஒளிவீசிடும் சிவப்புச்சுட ரழகாய்
இமைமூடிட விழிமுன்வரும், இதமாயொரு சுகமே !


( இது அதிகரீணி வகையிலான கலிவிருத்தம் !
புளிமாங்கனி + புளிமாங்கனி + புளிமாங்கனி + புளிமா )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (10-Sep-15, 11:48 am)
பார்வை : 118

மேலே