தங்கப் பஸ்பம்
தமிழ் எனும் தங்கப்பஷ்பம்
தமிழன் நாவில் ஊறுகின்றது
தமிழா நீ பேசும் தமிழ் மொழி
உணர்வுத் தமிழ் ஊக்கத் தமிழ்
தன்மானம் மிக்கது தார்ப்பரியம் உள்ளது
தலை நிமிர்ந்து நெஞ்சுரம் கொண்டு
வாழச் சொல்லும் தமிழ்
தமிழனை தன் தலை மேல்
உயர்த்தி வைத்து வேடிக்கை பார்க்கிறது
அளவற்ற சுயநலம் தமிழனுக்கு இதனால்தான்
தமிழன் என்றால் தலைக்கனம் கொண்டவன்
அவன் ஒரு வணங்காமுடி என்றெல்லாம்
சொல்ல வைத்தது நம் தாய் மொழி தமிழே
தமிழே உன் புகழ் பாட உன் குரல் ஓங்கிட
தமிழ் கொஞ்சும் கவிஞர் எண்ணிலடங்கா
தமிழ் எனும் கனியாலே கவி எனும் சாறெடுத்து
போதை உண்டு, கவியரசர் மகிழ்ந்தனரே ,
கவி வாழ்க, கவிஞர் வாழ்க
தமிழ் வாழ்க, தமிழ் புலமை வாழ்க ,