மொட்டுகளை மலர செய்வோம்
இருள் சூழ்ந்துள்ள
நிலைப்பாடுகளின் .
அடையாளங்களாய்
தவிட்டுக்கு வாங்கிய..
பிள்ளைகளாய்..
கோரிக்கையற்று கிடக்கும்
வேரில் பழுத்த பலாக்கள்..
கண் முன்னே நாளும் ..
காண்கின்றோம்..
ஆரம்பக் கல்வியும் சுகாதாரமும்
மறுக்கப்பட்ட சிறார்கள் ..
ஆதரவும்.. அன்பும் இன்றி
ஒதுக்கப்பட்ட முதியோர்கள்..
பகலவன் முகம் காணா..
மொட்டுகள் ..
இவர்கள்..!
முடிந்ததை செய்திடலாம்
நம்மில் எவரும்..
இந்த மொட்டுகள்
மலர்வதற்கு!
(நன்றி: நண்பர் முகமது சர்பான் - தலைப்பு தந்தமைக்கு)
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
