என் கவியே - பாரதி
தலப்பாகை கட்டிக்கொண்டு
தலைகனமா சுத்திவந்து
தரணிக்கே கவிபடைச்ச
தரமான சொல் வடிச்ச
பாமரனும் புரிஞ்சுக்கிட்டான் பலரும் உன்ன
பாதகமா நினைச்சுபுட்டான்
அக்ரகார வீதியில
சேரிவாடை வீச வைச்ச
கைகட்டி நின்னவன
ஏணி மேல ஏற வைச்ச
காக்கை கூட ஜாதியினு
பெண்சாதியை மறந்தவனே
அடுப்படினு வார்த்த சொல்லி
பெண் பாதினு நின்னவனே
விதவிதமா பூனை காட்டி
வர்ணம் இல்லை என்றவனே
ஏழை பிள்ள கூட்டி வந்து
கர்ணன் போல சோறு போட்ட தென்னவனே
ஏழெட்டு மொழியறிஞ்சும்
எம்மொழிய சிறக்க வைச்ச
எட்டப்பன் பலர் இருந்தும் வெள்ளையன
எதிர்த்து நின்ன
கண்ணன் பாட்டு
குயில் பாட்டுனு
எத்தனையோ எழுதி சைச்ச
நிப்பாட்டுனு சொன்ன போதும் அவர்
கண்ணில் விரல் விட்டு ஆட்டி வைச்ச
யாரடிச்சும் மதிக்காத
வேங்கை போல நின்ன உன்ன
யானை அடிச்சு போனதாக
கதை சொல்லி உள்ளனரே
என் கவியே பாரதியே
இறவாத மன்னவனே
திறவாத பூட்டையெல்லாம்
உடைத்தெறிந்த தென்னவனே