வந்திடுமோ வசந்தம்
அரை வயிறேனும் உண்டி அடைக்க
கரையும் காகம் கவண் இலக்காக்கி
இரையாய் கொள்ளும் இழிதல் ஒழிந்து
நிறைவாய் உண்ணும் நிகழ்வும் என்றோ?
பந்தமெனப் பசியும் பிணியும் பற்றிட
சொந்தமெனச் சொல்ல சோகமே உண்டு
வந்திடுமோ இவர்கள் வாழ்வில் வசந்தம்
வெந்த மனதில் வீசிடும் தென்றலாய்