விடியலைத் தேடி நான்

திரையிசையில் பாட்டெழுத
தினம் தினம் கனா கண்டேன்.
கரை காணா ஓடம் போல
காலமெல்லாம் தத்தளித்தேன்.

வாய்ப்பு ஒன்று வாங்கி வர
வானிலவைத் தூது விட்டேன்.
தேய்பிறையில் போன நிலவைத்
தேடிப் பார்த்தேன் அமாவாசையில்.

காதலுக்கு கவி எழுத
கண்ணதாசனைக் காதல் கொண்டேன்.
வாலி போல் கவி எழுத
வருந்தி நானும் வலியுற்றேன்.

வலி ஏந்திய என் விழிகள்
வழிந்து வரும் வேளையிலே
வைராக்கியம் நான் கொண்டேன்
வைரமுத்துவாய் கவி எழுத.

இசையுலகில் தடம் பதிக்க
இயலவில்லையே! என்னால்.
இனிவரும் காலமாவது
இனிதாகுமோ? என் முன்னால்.

ஒரு முறையேனும் - இசையில்
என் வரி கண்டால்
விழியோடு நான் பட்ட
வலி தீருமே தன்னால்.

இருளுலகில் வாழும் எனக்கு
இசையுலகில் ஒளி கிடைக்குமா?
விருப்பப்பட்ட வாய்ப்பை நாடி - நாளும்
விடியலைத் தேடி நான். ....

எழுதியவர் : தங்க மணிகண்டன் (11-Sep-15, 2:58 pm)
சேர்த்தது : தங்கமணிகண்டன்
பார்வை : 85

மேலே