உன்னை காணாத என் விழிகள் ஏங்குதடி 555

என்னவளே...
என் மீசைக்குள் மின்சாரம்
பாய்ச்சியவள் நீ...
என் ஹார்மோன்களை எல்லாம்
அடங்க சொன்னவள் நீ...
என் கோபங்களை எல்லாம்
கொப்பளித்து துப்பியவள் நீ...
என் கத்தி முனைக்கு காதலை
சொல்லிகொடுத்தவள் நீ...
என் வீரத்தில் பாதியை
விழுங்கியவள் நீ...
விழிகளால் காதல் பார்வை வீசி
என்னை சிறை எடுத்தவளும் நீ...
திருமணம் என்னும்
பந்தத்தால்...
என்னை முழுவதும் உன் வசம்
காந்தம் போல் இழுத்து கொண்டவள் நீ...
நீதானடி உயிரே...
இனியும் என்னை
தனிமையில் வாட்டாதே...
என்னிடம் கோபம் கொண்டு
உன் அம்மா வீட்டில் நீ இருந்தது போதும்...
உன்னை காணாத என்
விழிகள் ஏங்குதடி...
நம் தெருமுனையை
பார்த்துக்கொண்டே...
என்றும் உன்னவன்.....