ஆண் பெண் நட்பு

அண்டத் திரைக்குள் ஆண் பெண்ணாக
பிண்டந் துதைந்து வேடம் பூண்டே
அண்டைச் சுவற்றில் அடுத்தடுத்து இருந்து
சின்னஞ் சிறியதில் சேர்ந்து வள்ர்ந்தே
உண்டிட உறங்கிட நொடியும் இல்லாது
நொண்டி பள்ளாங்குழி தான் விளையாடி
நன்று வளர்ந்ததும் தள்ளி இருந்து
திருமணம் ஆனதும் விலகி நடந்து
என்றுதல் நட்பின் இன்றிலக்கணமோ!
தண்டென வளர்ந்த செடியை பிடுங்கி
மண் தனை மாற்றி இடும் நீர் போல
ஒன்றிய மனதில் ஒடுங்கி இருந்து
ஒன்றாய் திரிந்த நட்பதற்குள்ளே
என்று இருந்தது சதைகளின் சுவடு
பழகிய இருவரின் மனதினில் உள்ளே
அழகிய உயிர்புடன் இருந்திடும் அதனை (நட்பு)
திருமணம் நுழைந்து புதைத்திட தகுமோ?
துரியனின் மனைவியும் தாயத்தை உருட்ட
துரியனை கண்டதும் அவள் ஒடிட நினைக்க
கர்ணணும் நிலைமறந் தவளினை தடுக்க
அருந்தது மாலை அருந்ததுவோ
உருண்டோடிடும் முத்தினை எடுத்திடவோ
நான் எடுத்த அம்முத்தினை கோர்த்திடவோ
என்றது துரியனின் நம்பிக்கையோ
அவன் மனைவியும் கர்ணணும் நண்பர்களோ
பண்டைய காலமும் இன்றளவே
நட்பெணும் கழகத்தில் களக்கம் இல்லை.....